Tuesday 17 July 2012

உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!!

உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!!

          எதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி Folder-ஐ மறைத்து வைக்கும் போது மிகவும் சிரமம்தான், அது மட்டும் இல்ல அப்படி மறைத்ததை எல்லா தடவையும் Recover பண்ணமுடியறதில்லீங்க....

நமது கணினியில் நமக்கென்று ஒரு Folder ஐ பாதுகாப்பாக வைக்க மிகவும் சிறந்த வழி இது !!!

நீங்க பண்ணவேண்டியது ரொம்ப சிம்பிள் ஸ்டெப்

1.Start ஐ கிளிக் பண்ணி Run window வை ஓபன் பண்ணுங்க.
2.CMD  இன்னு  பண்ணி enter key ஐ press  பண்ணுங்க   .
3.அதுல எப்பவுமே ( C:\) இப்படித்தான் இருக்கும்
4.நீங்க எந்த folder ஐ மறைகனுமோ அந்த folder இருக்கிற  டிரைவ்க்கு ( Ex D:\ or E:\) மாறுங்க
5.இந்த கமெண்ட் ஐ type பண்ணுங்க E:/>attrib +h +s Folder Name ( Folder name = மறைக்க வேண்டிய folder உடைய பெயர் )
6.இப்ப Folder மறைஞ்சிடும்.

7.ஹைடு பண்னத திரும்ப வர வைக்க இந்த கமென்ட்ஐ யூஸ் பண்ணுங்க
E:/>attrib -h -s Folder Name

Wednesday 4 July 2012

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!

மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்!






இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கைவிடமுடியாது தவிக்கிறோம்.
அவ்வாறான செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன,
மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர்.


மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.




போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
போனில் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக அவசியமான நேரங்களில் மட்டும் மொபைல் ஐ பயன்படுத்துங்கள்.


உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.


சிறுவர்களின் உடல் மற்றும் மூளையே பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கவும். குழந்தைகளுக்கு அருகில் இருந்து மொபைலை பயன்படுத்தவேண்டாம். முக்கியமாக கர்ப்பினிகளுக்கு அருகில் மொபைலில் பேசுவதை தவிர்க்கவும்.


மொபைல் போன் உறைகள் போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவேளுறைகள் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.


சந்தையில் மலிவாக கிடைக்கும் சீன தயாரிப்பு மொபை போன்கள், ஏனையவற்றை காட்டிலும் அதிக கதிர்வீச்சை கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.




இவைதவிர, போக்குவரத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பாவிப்பது உடனடி மரணத்தை விளைவிக்க கூடியது.




Thanks to www.tamilcloud.com

பயனுள்ள விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்

பயனுள்ள விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்



2010 இறுதியில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 பயன்படுத்துவதற்கு இலகுவான முறையில், பயனர் இடைமுகத் தொடர்பு அதிகமுள்ளதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 7 இல் பயண்படுத்தக்கூடிய பயணுள்ள Shourtcuts கீழே தரப்படுகிறது.

Win + UP Arrow –> Maximize the current window
Win + Down Arrow–> Restore down or minimize current windows
Win + Left Arrow–> Dock the current window to the left half of the screen
Win + Right Arrrow–> Dock the current window to the right half of the screen
Win + [number]–> Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program wont be affected
Win + Home–> Minimize all but the current window
Win + Space–> Makes all windows transparent so you can see through to the desktop
Win + Pause/Break–> Open System Properties
Win + Tab–> Flip Aero 3D [press Tab to cycle between Windows]
Win + B–> Move focus to notification tray (the right-most portion of the taskbar)
Win + D–> Show/Hide desktop
Win + E –> Windows Explorer is launched
Win + F–> Search
Win + G–> Bring all gadgets on top and foreground
Win + L–> Lock Computer
Win + M–> Minimize all windows
Win + P–> Open the projection menu (generally used for laptops connected to projectors)
Win + R–> Run Command is launched.
Win + S –> OneNote Screen Clipping Tool
Win + T–> Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over
Win + X–> Mobility Center
Win + #–> Quicklaunch
Win + = –> Magnifier
Win + [+/-]–> Enables the magnifier and zooms in/out
Win + Shift + Up Arrow –> Maximize vertical size
Win + Shift + Down Arrow –> Restore vertical size
Win + Shift + Left Arrow–> Jump to left monitor
Win + Shift + Right Arrow–> Jump to right monitor
Win + Shift + M–> Undo all window minimization
Win + Shift + T–> Cycles backwards
Win + Ctrl + F –> Opens the Active Directory Find Computers dialog
Ctrl + Right Arrow–> Move the cursor to the beginning of the next word
Ctrl + Left Arrow–> Move the cursor to the beginning of the previous word
Ctrl + Up Arrow–> Move the cursor to the beginning of the previous paragraph
Ctrl + Down Arrow–> Move the cursor to the beginning of the next paragraph
Ctrl + Click –> A pinned taskbar icon to cycle through the programas open windows (e.g. IE)
Ctrl + Win + Tab–> Persistent flip 3D
Ctrl + Shift with an arrow key –> Select a block of text
Ctrl with any arrow key + Spacebar–> Select multiple individual items in a window or on the desktop
Ctrl + Shift + Esc –> Open Task Manager directly
Ctrl + Shift + N –> Create new folder


Thanks to http://www.tamilcloud.com/

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி!







தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Instol செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்
உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.




Thanks to http://www.tamilcloud.com/